தாய்லாந்தில் சீனப் பயணிக்கு சளிக்காய்ச்சல்

பேங்காக்: தாய்லாந்துக்குச் சென்ற சீன பயணி ஒருவருக்கு வூஹான் சளிக்காய்ச்சல் இருப்ப

தாகவும் அவர் தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

கடந்த 3ஆம் தேதி முதல்  தாய்லாந்து சென்ற 12 பயணிக

ளில் 61 வயது பெண்ணிற்கு சளிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சளிக்காய்ச்சல் முதல் முறையாக சீனாவைத் தவிர வெளிநாடு ஒன்றில் கண்டறியப் பட்டுள்ளது. சீனப் புத்தாண்டு விடுமுறையையொட்டி சுமார் 10 லட்சம் சீனப் பயணிகள் தாய் லாந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.