இலங்கை விமான நிலையத்தில் 200 தேள்கள் பறிமுதல்

கொழும்பு: இலங்கை விமான நிலைய அதிகாரிகள், உயிரோடு 200 தேள்களை கடத்த முயற்சி செய்த சீன ஆடவரைக் கைது செய்து அபராதம் விதித்துள்ளனர்.

திங்களன்று கொழும்பு விமான நிலையத்தில்  கொடிய விஷம் கொண்ட 200 தேள்களை சீன ஆடவர் தனது கைப்பெட்டியில்  பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

சீனாவுக்குக் கொண்டு சென்ற பிறகு தேள்களிலிருந்து அவர் விஷத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது.

“இருநூறு தேள்களின் மதிப்பு தெரியவில்லை. சந்தேக நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவரிடமிருந்த  தேள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் தமது நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்,” என்று சுங்கவரித் துறை பேச்சாளர் சுனில் ஜெயவர்த்தனே தெரிவித்தார்.