தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டுப் பன்றியை விழுங்கிய 20 அடி நீள மலைப்பாம்பு

1 mins read
28205f5b-802e-41d6-a080-458c2911a8ca
கம்போங் புக்கிட் நியாமுக்குக்கு அருகில் உள்ள செம்பனைத் தோட்டத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்றை விழுங்கிய 20 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் கம்போங் புக்கிட் நியாமுக்குக்கு அருகில் உள்ள செம்பனைத் தோட்டத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்றை விழுங்கிய 20 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

நேற்று (ஜனவரி 14) மாலை 4.59 மணிக்கு இது குறித்து தகவல் கிடைத்ததாக சிம்பாங் ரெங்காம் தீ மற்று மீட்பு நிலையத்தின் மூத்த அதிகாரி மஸ்னான் முகமது தெரிவித்தார்.

பத்து பணியாளர்களுடன் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டது.

"முக்கிய சாலையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருந்த செம்பனை தோட்டத்தில் பாம்பு பிடிக்கப்பட்டது. காட்டுப்பன்றி ஒன்றை அந்தப் பாம்பு விழுங்கியிருந்தது," என்ற அவர், இந்த நடவடிக்கை மாலை 5.21 மணிக்கு நிறைவுற்றது என்றார்.

பின்னர், காஹாங்கில் மனித நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் அந்தப் பாம்பு விடப்பட்டது என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #மலைப்பாம்பு