பேயோட்டும் சடங்கில் சித்திரவதை, கொலை: குழந்தைகள், கர்ப்பிணி உட்பட எழுவர் பலி

பனாமாவில் நிகழ்ந்த பேயோட்டும் சடங்கில் பழங்குடியினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களை சுமார் 10 சமய போதகர்கள் அடித்துத் துன்புறுத்தி, அரிவாளால் வெட்டிக் கொன்று தீயில் எரித்ததாக பனாமா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 14 பழங்குடியினரை அந்தச் சமய போதகர்தகள் கட்டிவைத்து அடித்துச் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களை அந்தச் சமய போதகர்கள் கூர்மையான ஆயுதங்களாலும் பைபிள்களாலும் அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற அந்த 14 பேரையும் போலிசார் காப்பாற்றியுள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் பனாமா கடலோரப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்தது.

சமய போதகர்களின் கொடுஞ்செயலிலிருந்து தப்பிய மூன்று பழங்குடியினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனப்பகுதிக்கு விரைந்த போலிசார் அங்கிருந்த ஒரு சிறிய பண்ணையில் பலர் பிடித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

அவர்கள் அனைவரையும் அந்தச் சமய போதர்கள் கொடுமைப்படுத்தியிருந்தனர். பண்ணைக்குள் போலிசார் நுழைந்தபோது ஆடைகளற்ற நிலையில் பெண் ஒருவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அங்கு அரிவாள்கள், கத்திகள் பலி கொடுக்கப்பட்ட ஆடு ஆகியவை இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறினர். பேயோட்டச் சடங்கு கடந்த சனிக்கிழமையிலிருந்து நடந்துகொண்டிருந்ததாகவும் போலிசார் அங்கு வருவதற்கு முன்பு பலர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பண்ணையிலிருந்து கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்தில் சவக்குழிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் ஆறு பிள்ளைகள், ஒரு பெரியவர் ஆகியோரின் சடலங்கள் இருந்தன.

மாண்ட பிள்ளைகளில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். பிள்ளைகளின் தாயாரும் இறந்து கிடந்தார். மாண்டபோது அவர் கர்ப்பமாக இருந்தார்.

அவர்கள் அனைவரையும் அந்தச் சமய போதகர்கள் கொடுமைப்படுத்திக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.

“இச்சடங்கிற்காக அந்தக் குடும்பத்தைச் சமய போதகர்கள் தேர்வு செய்தனர். அவர்களைச் சித்ரவதை செய்து கொன்றனர்,” என்று பனாமாவின் அரசு வழக்கறிஞர் திரு ரஃபாபல் பலோவேஸ் கூறினார்.

சந்தேக நபர்களில் மாண்ட குழந்தைகளின் தாத்தாவும் ஒருவர் என்று திரு பலோவேஸ் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #பேயோட்டும்சடங்கு #பனாமா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!