வாஷிங்டன்: கணவர் அருந்திய தண்ணீரில் கண்ணுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கலந்து, அவரைக் கொலை செய்த அமெரிக்கப் பெண்ணுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 53 வயதான லானா சூ கிளேட்டன் எனும் அந்த மாது, 'விசின்' எனும் கண் சொட்டு மருந்தை தம் கணவர் ஸ்டீவன் கிளேட்டன் அருந்திய தண்ணீரில் கலந்ததை ஒப்புக்கொண்டார். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுக்கு 'விசின்' கலக்கப்பட்ட நீரை லானா கொடுத்ததாகவும் அதன் விளைவாக ஸ்டீவன் இறந்து போனதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொட்டு மருந்து விட்டு கணவனைக் கொன்ற மாதுக்கு 25 ஆண்டு சிறை
1 mins read
கோப்புப்படம்: எஸ்டி -

