வூஹான்: சீனாவில் 2வது மரணம்

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் இன்னதென கண்டறியப்படாத கிருமித் தொற்று, இரண்டாவது உயிரைப் பலிகொண்டுள்ளது. ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ கிருமிகளை ஒத்ததாகக் கூறப்படும் அந்த ‘கொரோனாவைரஸ்’ கிருமியால் வூஹான் நகரில் பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிக்கப் பட்டவர்களில்  61 வயது ஆடவர் ஒருவர் இம்மாதம் 9ஆம் தேதி மாண்டு போனார். இந்நிலையில், அதே காரணத்தால் 69 வயது ஆடவர் ஒருவரும் கடந்த புதனன்று மரணம் அடைந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தாய்லாந்தில் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நபர் அடையாளம் காணப் பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், வூஹான் கிருமித்தொற்று பரவவில்லை என்பதை தாய்லாந்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல, தனது நாட்டிலும் எவரும் வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று மலேசியாவும் தெரிவித்துள்ளது.