நாயுடன் செல்ஃபி; 40 தையல்களில் முடிந்தது

2 mins read
265eb135-6ab7-4931-9395-9fb68a31319c
-
multi-img1 of 3

தோழியின் வளர்ப்பு நாயுடன் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் 40 தையல்கள் போடவேண்டிய நிலை உருவானது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 14 வயது லாரா சேன்சன் எனும் இளம்பெண் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த நாய் லாராவின் முகத்தைக் கவ்வியதுடன் பற்களை ஆழமாகப் பதித்தது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வலம்வருகின்றன.

நாய் கடித்த சம்பவத்தை அடுத்து லாராவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெற்றி, கன்னங்கள், உதடு, வாய் போன்ற இடங்களில் காயமும் தையலும் புகைப்படங்களில் தென்பட்டன.

நாய் தன்னைக் கடித்தபோது அவ்வளவாக வலிக்கவில்லை என்று கூறிய லாரா, நாய் வேண்டுமென்றே கடித்திருக்காது என்றார்.

"நான் அந்த நாயின் இடுப்பைத் தொட்டதால், கோபமுற்று அது என்னைக் கடித்ததா என்று தெரியவில்லை," என்று உள்ளூர் ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

லாராவின் உடல்நலம் சீராகத் தேறி வந்தாலும் சாப்பிட முடியாமல் சிரமப்படுகிறார்.

நாய்க்கு வயதானதால் ஏற்பட்ட வலிகள் காரணமாக அந்த நாய் இத்தகைய எதிர்வினை புரிந்திருக்கலாம் என்று உள்ளூர் கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

இது தொடர்பான லாராவின் டுவிட்டர் பதிவு இணையவாசிகள் பலரையும் ஈர்த்துள்ளது. பலர் தங்களது கருத்துகளையும் பதிவிட்டனர்.

"நாயை அதன் கழுத்துப் பகுதியில் கட்டிப் பிடிக்கக்கூடாது. அதன் அருகில் முகத்தைக் கொண்டு செல்லக்கூடாது. தம்மை தாக்க வருவதாக எண்ணி நாய் எதிர்வினை புரியும்," என்று ஒருவர் கருத்துரைத்துள்ளார்.

#தமிழ்முரசு #நாய்க்கடி #இளம்பெண் #40தையல்

குறிப்புச் சொற்கள்