தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானுடனான நட்பை வலுப்படுத்த டிரம்ப் அழைப்பு

1 mins read

தோக்கியோ: அமெரிக்கா-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 60வது ஆண்டு நிறைவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கிடையில் வலுவான, ஆழமான நட்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"பாதுகாப்புச் சூழல் மாறி வருவதால், புதிய சவால்கள் எழும்போது, ​​எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறுவதும் ஆழப்படுத்தப்படுவதும் அவசியம்.

"வரும் மாதங்களில், எங்கள் பரஸ்பர பாதுகாப்பிற்கு ஜப்பானின் பங்களிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும், எங்கள் நட்பு செழித்து வளரும் என்று நம்புகிறேன்," என்று அறிக்கை ஒன்றில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய டிரம்ப், 60 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் நியாயமற்றது. அதில் கண்டிப்பாக மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது குறித்து தான் யோசிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.