மணிலா: கடத்தல்காரன் கொல்லப்பட்டான்

மணிலா: மலேசியாவின் சாபாவில் கடலோரப் பகுதியில் ஐந்து இந்தோனீசிய மீனவர்களைக் கடத்தியவர்களில் ஒருவனை பிலிப்பீன்ஸ் போலிசார் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஒருவர் கூறினார்.

பிலிப்பீன்சின் மிண்டானோ பகுதி படைப் பிரிவுத் தளபதியான அவர், அபு சயாஃப் கடத்தல் குழுவால் பயன்படுத்தப்பட்ட வேகப் படகு ஒன்றையும் பாராங் தீவில் கண்டுபிடித்ததாகவும் சொன்னார்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ராணுவப் படையினருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மூண்ட மோதலில் ஒருவன் கொல்லப்பட்டான்.

Loading...
Load next