ஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது

பாக்தாத்: ஈராக்கிய அரசுக்கு எதிராக அந்நாட்டில் பல இடங்களில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

புதிய அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அரசியலமைப்பு, தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈராக்கில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் நேற்று போராட்டக்காரர்கள் முக்கிய வீதிகளில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதில், அமெரிக்கப் படைகளால் அண்மையில் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சிப்படைத் தலைவர் காசிம் சுலைமானியின் படங்களைப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.