அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரும் வழக்கறிஞர்கள்

அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரும் வழக்கறிஞர்கள்

1 mins read

வாஷிங்டன்: பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால் அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிபர் டிரம்ப் பதவி நீக்கப்பட்டால் அமெரிக்க அதிபர் பதவியை ஜனநாயகக் கட்சியினர் நிரந்தரமாகப் பலவீனப்படுத்திவிடுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.