சுடச் சுடச் செய்திகள்

எலும்பும் தோலுமாக, பார்க்கவே பரிதாபமான நிலையில் 'காட்டு ராஜாக்கள்'

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள அல் குரேஷி உயிரியல் பூங்காவில் எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமாக ஐந்து சிங்கங்கள் உள்ளன. இந்த பூங்காவை நிர்வகிக்க கார்டூம் மாநகராட்சி நிர்வாகத்தால் போதிய அளவு நிதி வழங்கப்படவில்லை. 

மேலும், தனியார் நன்கொடையாளர்கள் பூங்காவிற்கு அளித்துக்கொண்டிருந்த நிதியும் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிங்கங்களுக்கு போதுமான அளவு மாமிசம் கொடுப்பதற்கு நிதி தரப்படாத நிலையில், ஊழியர்கள் பரிதாபப்பட்டு தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவற்றுக்கு ஓரளவுக்கு உணவு அளித்து வருகின்றனர். 

இந்த சிங்கங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று இப்போது இணையதளத்தில் புதிய பிரசாரம் தொடங்கி உள்ளது. 

குறைந்தபட்சம் இந்த சிங்கங்களை காட்டுப்பகுதிக்கு சென்று விடுவித்தாலாவது அவையே தங்கள் உணவை தேடிக் கொள்ளும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#தமிழ்முரசு #சிங்கம் #சூடான்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon