விடுதிக்குள் விருந்தினர்போல் உலா வந்த யானை

விடுதிக்குள் விருந்தினர்போல் உலா வந்த யானை

1 mins read
e0ece3b2-f035-4c61-9ca4-92f80c5fbd0b
இலங்கையில் யானை ஒன்று  ஒரு சொகுசு விடுதிக்குள் சென்று சுற்றிப்பார்த்து விட்டு எந்த சேதத்தையும் விளைவிக்காமல் வெளியில் வந்துள்ளது. படம், காணொளி: உபுலி என்பவரின் சமூக ஊடகப் பக்கம் -

இலங்கையில் யானை ஒன்று ஒரு சொகுசு விடுதிக்குள் சென்று சுற்றிப்பார்த்து விட்டு எந்த சேதத்தையும் விளைவிக்காமல் வெளியில் வந்துள்ளது.

விடுதியின் முன் வாசல் வழியாக ஒய்யாரமாக நுழைந்த யானை அங்கிருந்த ஒவ்வோர் அறையையும் பொறுமையாக சுற்றிப்பார்த்து வந்தது.

பொதுவாக தனியாக இருக்கும் யானைகள் மனிதர்களைக் கண்டால் கோபத்துடன் நடந்துகொள்ளும். ஆனால், பலர் இருந்த அந்த விடுதிக்குள் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் உலா வந்துள்ளது.

அப்போது அங்குள்ள மின் விளக்கு ஒன்றை யானை தொட்ட பொழுது அது கீழே விழுந்து விட்டது. அப்போது அதனை தனது தும்பிக்கையால் எடுக்க முயற்சித்து தோற்றுப்போனது.

பின்னர், அங்குள்ள கண்ணாடி வழியாக நகரத்தை ரசித்து பார்த்து விட்டு அங்கிருந்து அமைதியாக சென்று விட்டது. இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#தமிழ்முரசு #யானை #இலங்கை #ஊர்வலம்

குறிப்புச் சொற்கள்