சுடச் சுடச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கி மூவர் மரணம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் இருந்த அமெரிக்கர்கள் மூவரும் உயிரிழந்தனர். 

தண்ணீரைச் சுமந்து சென்று தீயணைப்புப் பணிகளில் உதவக்கூடிய அந்த ஹெர்குலிஸ் சி-130 

‘ஏர் டேங்கர்’ விமானம் கனடாவுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஆல்பைன் வட்டாரத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அந்த விமானம் ஈடுபட்டிருந்தது என்றும் அது விழுந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய வேகத்தில் அவ்விடத்தில் பெரும் தீப்பந்து  எழும்பியதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon