சுமத்ரா: படகு மூழ்கி பத்துப் பேர் மாயம்

சுமத்ரா: படகு மூழ்கி பத்துப் பேர் மாயம்

1 mins read

பெக்கன்பாரு: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நேற்று ஊழியர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மூழ்கியது. அதில் பயணம் செய்த 20 பேரில் பத்துப் பேர் மீட்கப்பட்டனர் என்றும் எஞ்சியவர்களைக் காணவில்லை என்றும் இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகளில் படகு சிக்கி கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. படகில் பயணம் செய்த அனைவரும் கள்ளக்குடியேறிகள் என்று இந்தோனீசிய காவல்துறை தெரிவித்தது. இந்தோனீசியர்கள் பிழைப்புத் தேடி கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் குடியேறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதற்காக அவர்கள் சிறிய படகுகளில் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.