110 கிலோ எடை குறைந்த 13 வயது சிறுவன்

193 கிலோ கிராம் எடை கொண்டிருந்த 13 வயது இந்தோனீசிய சிறுவன், 110 கிலோ குறைந்திருக்கும் செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு உடல் பருமனாக இருந்த ஆர்யா குறித்து 2016ஆம் ஆண்டில் செய்தி வெளியானதும் தொழில்முறை  உடற்கட்டழகு வீரரான எடி ராய் அவருக்கு உதவ முன்வந்தார்.

ஆர்யாவின் உடற்பயிற்சிகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

“நான் எடியை முதல்முறையாகச் சந்தித்தபோது அவருடன் பிளேஸ்டேஷன் காணொளி விளையாட்டை விளையாட அவர் அழைப்பு விடுத்தார்,” என்று பண்டோங்கில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்யா.

பல மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கிய உணவுமுறை, உடற்பயிற்சி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றுக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 110 கிலோ கிராம் குறைந்துள்ளார் ஆர்யா. தற்போது அவரது எடை 86 கிலோ கிராம்.

இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்துகொள்ள வேண்டும்.

அடுத்த மாதம் ஆர்யா தமது 14வது பிறந்நாளைக் கொண்டாட இருக்கிறார்.

உடல் எடையைக் குறைக்க விரும்பும் உடல் பருமமாக இருக்கும் பல சிறுவர்களுக்கு ஆர்யா ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் என்று எடி தெரிவித்தார்.

#தமிழ்முரசு #இந்தோனீசியா #எடைகுறைந்தசிறுவன்