வூஹான்: ஜோகூர் பாருவில் தனிமைப்படுத்தப்பட்ட எண்மர்

வூஹான்: ஜோகூர் பாருவில் தனிமைப்படுத்தப்பட்ட எண்மர்

1 mins read
7b296a0b-9dd2-457e-91d4-a4a6745b2ab5
மலேசியாவிலும் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் எட்டுப் பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

வூஹான் 'கொரோனா வைரஸ்' கிருமித் தொற்றினால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் அந்தக் கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் அந்த எட்டுப்பேரும் நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர்களுக்கு கிருமித் தொற்றின் அறிகுறி ஏதும் தென்படவில்லை என்றும் அவர்கள் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுவதாகவும் மலேசிய துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சை கூறினார்.

#தமிழ்முரசு #வூஹான் #ஜோகூர்பாரு #மலேசியா