பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதன் தொடர்ச்சியாக வரும் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இது தொடர்பாக, 2016ஆம் ஆண்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்

பட்டது.

அதில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பிரதமர்கள் மாறினர்.

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியால், பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவிற்கான பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தமது ஒப்புதலை அளித்துள்ளார்.

இந்நிலையில், பிரெக்சிட் மசோதாவுக்கு ராணி அதிகாரபூர்வமான ஒப்புதலை அளித்துள்ளதாக பிரெக்சிட் விவகாரங்களைக் கவனிக்கும் செயலாளர் ஸ்டீவ் பார்க்கலே தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!