சுடச் சுடச் செய்திகள்

சீனாவில் கோரோனா கிருமிக்கு பலியானோர் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது

சீனாவில் வூஹான் கோரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது. சீனாவில் கிட்டத்தட்ட 2,000 பேர் கோரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிருமி அதிவேகத்தில் பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்நாட்டின் அதிபர் ஸின் ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாநிலத்தைச் சேர்ந்த வூஹானில் கடந்த ஆண்டு இந்த கோரோனா கிருமி உருவானதாகவும் அது இப்போது சீனாவின் தலைநகர் பெய்ஜிங், ‌ஷாங்காய் போன்ற நகரங்களுக்குப் பரவியதோடு சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கும் பரவி பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon