ஈரான் மீதான தடைகள் நீக்கப்படாது: டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடைகள் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவத் ஸாரிஃப், ‘டெர் ஸ்பீகல்’ எனும் ஜெர்மானிய வார இதழுக்கு அளித்த நேர்காணலைத் தொடர்ந்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அதற்குமுன் பொருளியல் தடைகள் நீக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தேவையில்லை, நன்றி!” என்று ஆங்கிலத்திலும் ஃபார்சி மொழியிலும் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இம்மாதம் 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து ஈரானிய தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது. இதையடுத்து, அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியது.

இதையடுத்து, அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கப் படையினர் 34 பேருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!