மக்காவ் வருகையாளர்களின் எண்ணிக்கை 80% சரிந்தது

ஹாங்காங்: வூஹான் கிருமித்தொற்று காரணமாக மக்காவ் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 80% சதவீதம் குறைந்துள்ளதாக நகர சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது சூதாட்டத் தொழிலை நம்பியுள்ள அந்நாட்டிற்கு விழுந்த பேரிடியாகும். 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சூதாட்டக்கூடங்கள் தற்பொழுது மிக மோசமான ஆண்டைச் சந்தித்துள்ளன. 

இதற்கிடையே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்ட மருத்துவமனையில்  சிறிய ரக குண்டு வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவியது.