சிட்னி: அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீச்சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது
என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பலமான காற்று வீசக்கூடும் என்பதாலும் காட்டுத்தீயால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட கிழக்கு மாநிலங்கள், காட்டுத்தீ தற்காப்பு நடவடிக்கை
களை வலுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ சுமார் மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்தது. அதில்
1 பில்லியன் விலங்குகளும் 33 மக்களும் உயிரிழந்தனர். சுமார் 2,500 வீடுகள் தீயில் கருகின. பல்லாயிரக்கணக் கான நிலங்கள் சேதமடைந்தன.
பெருமளவில் பரவிய தீ சில வாரங்களுக்கு முன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் சுமார் 100 இடங்களில் காட்டுத்தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அங்கு மீண்டும் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

