நள்ளிரவில் 35 படகுகளுக்குப் பரவிய தீ; எட்டுப் பேர் பலி

நள்ளிரவில் 35 படகுகளுக்குப் பரவிய தீ; எட்டுப் பேர் பலி

1 mins read
31951c07-57e2-42b5-b653-b45847c29230
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் தன்னுடைய ராணுவ விமானம் என்று அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. படம்: இணையம் -

அலபாமா: அமெரிக்காவின் அலபாமாவில் மரினா படகு வீடுகளில் பற்றிய தீயில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஸ்காட்ஸ்போரோ நகரத்தில் டென்னிசி நதி கரையோரம் கட்டப்பட்டிருந்த மரத்தினாலான படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படகு ஒன்றில் திடீரென பற்றிய தீ, மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியது.

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து நாசமாகின. சில படகுகள் ஆற்றில் மூழ்கின.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

படகில் இருந்து ஆற்றில் குதித்தவர்களில் ஏழு பேரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.