வூஹான் பயணிகளுக்கு எல்லைகளை மூடும் நாடுகள்

1 mins read

ஹாங்காங்: ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான அதிவேக ரயில் சேவை வியாழக்கிழமை முதல் நிறுத்தப்படும் என்றும், எல்லை தாண்டிய அனைத்து படகு சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் ஹாங்காங் தலைவர் கேரி லாம் நேற்று தெரிவித்தார்.

திருமதி லாம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சீனாவின் முக்கிய பகுதிகளுக்கான விமானங்களின் எண்ணிக்கையும் பாதியாக நிறுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

வூஹான் கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

வூஹான் கிருமித்தொற்றில் முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சீன பயணிகளுக்கு விசா வழங்குதை ரத்து செய்துள்ளது.

மங்கோலியாவும் வூஹான் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.