தோக்கியோ: சீனா செல்லாத ஒருவர் வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் சம்பவத்தை ஜப்பான் உறுதி செய்துள்ளது.
இதோடு ஜப்பானில் வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
60 வயது மிதக்கத்தக்க அந்த ஆடவர், இந்த மாதம் வூஹானில் இருந்து வந்த இரண்டு சுற்றுலா குழுவினரை அழைத்துச் சென்ற ஓட்டுநர் என்று கியோடோ செய்தி தெரிவிக்கிறது.
முதலில் ஜனவரி 14ஆம் தேதி அவருக்கு ஜலதோஷத்தின் அறிகுறிகள் இருந்ததாகவும் ஜனவரி 25ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு வூஹான் கிருமித்தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வூஹானில் வசிக்கும் ஜப்பானியர்களைத் தனி விமானம் மூலம் அழைத்து வரும் ஏற்பாட்டின் முதல் கட்டமாக 200 பேர் இன்று காலை ஜப்பான் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

