ஜெர்மனி: சக ஊழியரிடமிருந்து தொற்றிய முதல் சம்பவம்

ஜெர்மனி: சக ஊழியரிடமிருந்து தொற்றிய முதல் சம்பவம்

1 mins read

மியூனிக்: ஜெர்மானியர் ஒருவருக்கு சீனா சென்று வந்த சக ஊழியரிடமிருந்து வூஹான் கிருமி தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வந்த பெண் ஒருவர் சென்ற 21ஆம் தேதி அளித்த பயிற்சி வகுப்பில் ஜெர்மனியில் வசிக்கும் ஒருவர் கலந்துகொண்டார்.

கடந்த 23ஆம் தேதி முதல் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர் ஒருவர் கூறினார்.

இவருக்கு வூஹான் கிருமித் தொற்று இருப்பது உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை உறுதிப் படுத்தப்பட்டது.

33 வயது நிரம்பிய அந்த ஆடவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

பயிற்சி அளித்த அப்பெண்ணிற்கும் வூஹான் கிருமித்தொற்று இருப்பது அவர் சீனாவுக்குத் திரும்பியவுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.