அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற கடைக்கு அபராதம்

அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற கடைக்கு அபராதம்

1 mins read

பெய்ஜிங்: வூஹான் தொற்று ஏற்படாமல் இருக்க அணியும் முககவசங்களை மிக அதிக விலைக்கு விற்றதாக பெய்ஜிங்கில் உள்ள மருந்துக் கடை ஒன்றுக்கு மூன்று மில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து முககவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகார்களையடுத்து அரசு அதிகாரிகள் விலை சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இணையத்தில் விற்கப்படும் விலையைவிட என்95 முககவசங்களை ஆறு மடங்கு அதிக விலைக்கு விற்ற பெய்ஜிங் ஜிமின் கன்டாய் என்ற மருந்துக் கடைக்கு மூன்று மில்லியன் யுவான் (590,000 சிங்கப்பூர் வெள்ளி) அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் தரக்குறைவான முககவசங்களை விற்ற மற்றோர் கடையை மூடவும் அவர்கள் உத்த ரவிட்டனர்.

கடந்த 6 நாட்களில் அதிக விலைக்கு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை விற்றதாக 31 புகார்கள் பதிவாகியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.