சாமிநாதனின் பிணை மனுவை தள்ளுபடிசெய்தது மலேசிய நீதிமன்றம்

1 mins read
8a4fe279-e264-4840-af43-9e30cd1d772e
காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். கோப்புப்படம்: இணையம் -

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் காடெக் சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதனின் பிணை மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்பதை அரசாங்க பதிவேட்டிலிருந்து உள்துறை அமைச்சு இன்னும் மீட்டுக்கொள்ளவில்லை என்று நீதித்துறை ஆணையர் அகமட் ஷாரிர் முகமட் சாலே தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியது மற்றும் அந்த இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருந்ததாக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களை இம்மாதம் 20ஆம் தேதி சாமிநாதன் மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

சாமிநாதன் சார்பில் முன்னி லையான வழக்கறிஞர் ஹர்ஷான் ஷமானி பிணை கோரி தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.