‘கொரோனா கிருமி பரவல் உலக சுகாதார நெருக்கடி’

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா கிருமி, உலகளவில் கவலையளிக்கும் பொது சுகாதார நெருக்கடி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

2003ஆம் ஆண்டு ‘சார்ஸ்’ கிருமி தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் தற்போதுதான் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.  

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைக் குழுவின் நேற்றைய (ஜனவரி 30) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டெட்ரஸ் அதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.

சீனாவின் மீதான நம்பிக்கையின்மையை இந்த அறிவிப்பு குறிக்காது என்றும் அவர் குரிப்பிட்டார்.

அனைத்து நாடுகளிலும் எல்லை தாண்டி இந்த கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

#WHO #தமிழ்முரசு

Loading...
Load next