சுடச் சுடச் செய்திகள்

கேலி செய்த இளம்பெண்ணை கொன்று, எரித்த ஆடவர்

தன்னுடன் பணிபுரிந்த பெண் ஒருவரை கழுத்தை நெறித்துக் கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்து கரிக்கட்டையாக்கியுள்ளார் 27 வயது இளைஞர். 

காராணம் என்ன? 

பலரது முன்னிலையில் அலி ஹரி சஞ்சயா எனும் அந்த ஆடவரை அந்தப் பெண் ‘குண்டானவர்’ என்று பலமுறை கூறியதுடன் சுமோ மல்யுத்த வீரர்களுடன் அலியை ஒப்பிட்டதுதான்.

இந்தோனீசியாவில் உணவகம் ஒன்றில் பல ஆண்டுகளாக இருவரும் பணிபுரிவதாகக் கூறப்பட்டது. இந்தோனீசியர்களான அவர்கள் இருவரும் சிறு வயது முதலே ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என்றும் கூறப்பட்டது.

ரோசிடா எனும் அந்தப் பெண் கடந்த 24ஆம் தேதி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து போலிசில் புகார் அளித்தனர் அவரது பெற்றோர்.

ஆனால், தென்னந்தோப்பு ஒன்றிற்குள் அந்தப் பெண்ணின் எரிந்து கரிக்கட்டையான உடல்தான் கிடைத்தது. சற்று தூரத்தில் அந்தப் பெண்ணின் தலைக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அலி இந்தக் கொலைக்குத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. 

சம்பவத்தன்று ரோசிடா வேலை முடிக்கும் வரை காத்திருந்த அலி, ரோசிடாவின் இரு சக்கர வாகனத்தில் தம்மை வீட்டுக்கு உடன் அழைத்துச் செல்லுமாறு கோரினார்.

பொன்டோக் நோங்கோ கிராமத்துக்கு அருகில் உள்ள தென்னந்தோப்புக்குச் சென்றதும் ரோசிடாவை வாகனத்திலிருந்து இறங்குமாறு கோரிய அலி, ரோசிடாவின் கழுத்தை நெறித்துக் கொன்றார். 

பின்னர், கையுடன் எடுத்துச் சென்ற பெட்ரோலை ரோசிடாவின் சடலத்தின் மீது ஊறி தீ வைத்த அலி, ரோசிடாவின் கைபேசி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றை எடுத்துச் சென்று விற்றுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த அலியை போலிசார் கைது செய்தனர்.

 ரோசிடாவைக் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால் அலிக்கு மரண தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

#கேலி #உடற்பருமன் #தமிழ்முரசு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon