குண்டர் கும்பல் சூழ்ந்ததால் வேலியைத் தாண்டி ஓடிய மலேசிய அமைச்சர்

குண்டர் கும்பல் சூழ்ந்ததால் வேலியைத் தாண்டி ஓடிய மலேசிய அமைச்சர்

1 mins read
32c22f54-6207-4b2a-8455-3542d84b9b9c
மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளையர் அணியினர் நடத்திய கூட்டத்தில் தம் தாயாருடன் சேர்ந்து பங்கேற்ற இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான். படங்கள்: SYED SADDIQ/INSTAGRAM, TEAM SADDIQ/TWITTER -

மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளையர் அணியினர் நடத்திய கூட்டத்தில் குண்டர் கும்பல் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது.

இதனால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளையர் அணித் தலைவரும் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சருமான சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வேலியைத் தாண்டி தப்பியோடினார்.

வெள்ளிக்கிழமை இரவு உலு திராமில் நடந்த சம்பவம் குறித்து பெர்சத்து கட்சியின் இளையர் அணியினர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத ஒரு கும்பல் உள்ளே புகுந்து கூச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக தமது ஃபேஸ்புக் பதிவில் திரு சையத் தெரிவித்தார்.

"கருப்பு உடை அணிந்த சுமார் 200 பேர் எங்களை சூழ்ந்து கொண்டனர். எங்களைப் பார்த்து கூச்சல் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய செயல்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தன. இந்த குண்டர் கும்பலிடமிருந்து தப்பிக்க வேலியைத் தாண்டி ஓட வேண்டியிருந்தது," என்று ஃபேஸ்புக் பதிவில் திரு சையத் குறிப்பிட்டார்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை காணொளியில் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#மலேசியா #தமிழ்முரசு #ஜோகூர்

குறிப்புச் சொற்கள்