சீனாவிலிருந்து 40 மலேசிய மாணவர்கள் நாடு திரும்பினர்

சீனாவிலிருந்து 40 மலேசிய மாணவர்கள் நாடு திரும்பினர்

1 mins read
532cdda5-49e7-4944-b6e7-645e244338c4
அவர்கள் தனிமைப்படுத்தப்படாவிடினும் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

சீனாவில் பயின்றுவரும் கிட்டத்தட்ட 40 மலேசிய மாணவர்கள் அண்மையில் நாடு திரும்பினர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்படாவிடினும் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பெய்ஜிங்கில் படித்து வருவதாகக் கூறப்பட்டது.

நாடு திரும்பியதும் அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

"இதுவரையிலும், சீனாவிலிருந்து திரும்பிய அந்த மாணவர்கள் அனைவரும் நல்ல உடல்நிலையுடன் உள்ளனர்," என அமைச்சு குறிப்பிட்டது.

மலேசியாவில் இதுவரை எட்டுப் பேருக்கு வூஹான் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

ஹுபெய் மாநிலத்தில் இருக்கும் 117 மாணவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#வூஹான் #தமிழ்முரசு #மலேசியா

குறிப்புச் சொற்கள்
மலேசியாமாணவர்கள்