வூஹான் திரும்பிய 199 சீனர்கள்

வூஹான் திரும்பிய 199 சீனர்கள்

2 mins read
54b5e397-1dad-4246-9df4-feaaee6a325b
விமானங்கள் மூலம் தாய்லாந்தில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் ஹுபெய்வாசிகள் 199 பேர் நேற்று முன்தினம் இரவு வூஹானுக்கு அழைத்து வரப்பட்டனர். படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: சீனாவில் புதுவகை கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 11,791ஆக உயர்ந்துவிட்டது. அவர்களுள் 1,795 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் நேற்றைய அறிக்கை தெரிவித்தது. அத்துடன், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை மேலும் 17,988 பேரை அந்தக் கிருமி தொற்றி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உடல்நலம் தேறியதால் மருத்துவமனையில் இருந்து இதுவரை 243 பேர் வீடு திரும்பிவிட்டனர்.

நேற்று முன்தினம் மட்டும் அந்தக் கிருமித்தொற்றால் 46 பேர் மாண்டு போயினர். கிருமித்தொற்றின் மையப்புள்ளியான ஹுபெய் மாநிலத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்துவிட்டனர்; இன்னொருவர் சொங்சிங் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்ட ஹுபெய் மாநிலத்தில் சீனப் புத்தாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற பகுதிகளிலும் நிலைமையைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பதைத் தள்ளிவைக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறிவுறுத்தி இருக்கிறது.

இதனிடையே, உறுப்பு நாடுகளிடம் இருந்து உடனடியாக மருத்துவச் சாதனங்கள் கொள்முதல் செய்ய உதவும்படி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனப் பிரதமர் லீ கெச்சியாங் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

வூஹான் திரும்பிய 199 சீனர்கள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஹுபெய்வாசிகளைத் திரும்ப அழைத்து வரும் பணியை சீனா தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, இரண்டு 'ஸியாமென் ஏர்லைன்' விமானங்கள் மூலம் தாய்லாந்தில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் ஹுபெய்வாசிகள் 199 பேர் நேற்று முன்தினம் இரவு வூஹானுக்கு அழைத்து வரப்பட்டனர். பயணிகள் அனைவரது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப் பட்டது. படம்: இபிஏ