ஈராக்கில் தொடரும் போராட்டங்கள்

ஈராக்கில் தொடரும் போராட்டங்கள்

1 mins read
7f3fee3f-98a2-4439-ad0a-38e8d10aa1ff
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக்கின் நஜாஃப் நகரில் வாகனத்தின் சக்கரங்களை தீயிட்டு கொளுத்தி வீசி, சாலை  மறியலில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஊழல், வேலையின்மை காரணங்களால் தெற்கு ஈராக்கிலும் பாக்தாத்திலும் அந்நாட்டு மக்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர், அரசியலமைப்பு, தேர்தல் முறையை மாற்றி யமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று ஈராக்கின் புதிய பிரதமராக பொறுப்போற்றுக்கொண்ட முகமது அல்லாவி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசினார். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக்கின் நஜாஃப் நகரில் வாகனத்தின் சக்கரங்களை தீயிட்டு கொளுத்தி வீசி, சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்