நைரோபி: தான்சானியா நாட்டின் மோஷி நகரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
பிரார்த்தனையின்போது ஆசிர்வதிக்கப்பட்ட எண்ணெய் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மக்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்னே செல்ல முற்பட்டது.
அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெரிசலில் சிக்கி காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

