இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் கூறுகையில், "20 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக்கிளி தாக்குதலை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்த அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளோம்," என தெரிவித்துள்ளார்.

