தீயில் கருகி ஆடவர் மரணம்; 300 வீடுகள் சாம்பல்

தீயில் கருகி ஆடவர் மரணம்; 300 வீடுகள் சாம்பல்

1 mins read

பாலு, மத்திய சுலவேஸி: இந்தோனீசியாவின் மத்திய சுலவேஸி மாகாணத்தில் உள்ள பவோலான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மூண்ட பெருந்தீயில் ஒருவர் மாண்டார்.

இரவு 11 மணியளவில் ஒரு வீட்டில் பற்றிய தீ பலமாகக் காற்று வீசியதால் பல வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. தீணையப்பாளர்கள் தீயைக் கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடினர். இறுதியாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடற்கரை ஓரம் இருந்து 300க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் முற்றாகக் கருகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் பல மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டவை என்பதால் தீ எளிதில் பற்றி அவற்றை அழித்தது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தோர் உடடினயாக அலறி அடித்து வெளியேறினர். இருந்தபோதிலும் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் தீயில் கருகி மாண்டார். விரைவாக தப்பிக்க இயலாததால் தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் அவர் மாட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது.