தாய்லாந்தில் மேலும் அறுவருக்கு கொரோனா கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 25 ஆனது

தாய்லாந்தில் மேலும் அறுவருக்கு கொரோனா கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 25 ஆனது

1 mins read
8eb574d6-9f24-4752-8d63-58a90aa8be28
தாய்லாந்தின் பான் சாங் விமான நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர். படம்: இபிஏ -

தாய்லாந்தில் நோவல் கொரோனா கிருமித் தொற்றால் மேலும் அறுவர் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று (பிப்ரவரி 4) தெரிவிக்கப்பட்டது. அவர்களில் நால்வர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்; இருவர் சீன நாட்டவர்.

ஜப்பானுக்குச் சென்று வந்த ஒரு தம்பதியர், சீனப் பயணிகள் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநர்கள் இருவர் ஆகிய நான்கு தாய்லாந்து நாட்டவர் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.

புதிதாக கிருமித் தொற்று ஏற்பட்ட நால்வருடன் சேர்ந்து தாய்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

#தமிழ்முரசு#தாய்லாந்து#கொரோனா

குறிப்புச் சொற்கள்