மலேசியா: சீனாவில் பாமாயில் தேவை வலுவாக உள்ளது

மலேசியா: சீனாவில் பாமாயில் தேவை வலுவாக உள்ளது

1 mins read

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமான போதும் சீனாவில் பாமாயிலின் தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மலேசியா கூறியுள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரமுடியாத நிலையில், எண்ணெய் அதிகமாக பயன்படுத்தி செய்யப்படும் நூடுல்ஸ் போன்ற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையே அவர்கள் உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதால் பாமாயிலின் தேவை வலுவாக இருக்கும் என அத்துறையினர் கூறுகின்றனர்.

வைரஸ் பெருமளவு பரவி வரும் நிலையில், சீனாவில் கடைகள், உணவகங்கள் மூடப்படுவதால் வரும் வாரங்களில் பாமாயிலின் விலை பெருமளவு சரியக்கூடும் என்று வர்த்தகர்கள் முன்னுரைத்தனர்.

ஆனால், கிருமித் தொற்றால் உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் அளவு குறைந்தாலும் நூடுல்ஸ் போன்ற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்பதால் அது பாமாயில் இறக்குமதி செய்யப்படும் அளவை ஈடுகட்டும் என்று மலேசிய பாமாயில் வாரியம் கூறியுள்ளது.