வாஷிங்டன்: சீனா உட்பட அமெரிக்க டாலருக்கு எதிராக தங்கள் நாணயத்தைக் குறைத்து மதிப்பிடும் நாடுகளின் தயாரிப்புகளுக்கு வரி விதிக்க வகை செய்யும் புதிய விதியை அமெரிக்க வர்த்தகத் துறை நேற்று இறுதி செய்தது. நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து சீனாவை அமெரிக்கா நீக்கியிருந்தாலும் இப்புதிய விதியின் படி சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கக்கூடும்.
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடும்.

