பெட்ரோல், டீசல் கார்களுக்குத் தடை

1 mins read

லண்டன்: பிரிட்டனில் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் கார்களை 2035ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கான இலக்கை அடைய 2040ஆம் ஆண்டு வரை காத்திருந்தால் தாமதமாகிவிடும் என்று நிபுணர்கள் கூறியதை அடுத்து இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடு சபைகளின் பருவநிலை மாற்ற உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் கொள்கையைத் தெரிவிக்கவுள்ளார்.