' 2021 முதல் கடப்பிதழ் இன்றி மலேசியர் சிங்கப்பூருக்குள் வர முடியாது'

' 2021 முதல் கடப்பிதழ் இன்றி மலேசியர் சிங்கப்பூருக்குள் வர முடியாது'

1 mins read
135953f5-3331-4fff-bcc5-bb826159ee74
'எம்சிடிடி' எனும் மலேசிய கூட்டுப் பயண ஆவணத்தைக் கொண்டு, மலேசியர்கள் அடுத்த ஆண்டில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'எம்சிடிடி' எனும் மலேசிய கூட்டுப் பயண ஆவணத்தைக் கொண்டு, மலேசியர்கள் அடுத்த ஆண்டில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது.

மாறாக, இங்கு வர விரும்பும் ஒவ்வொரு மலேசியரும் தனித்தனியாகக் கடப்பிதழ் வைத்திருக்க வேண்டும் என குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது.

தனித்தனி கடப்பிதழுக்குப் பதில் மலேசிய குடிநுழைவுத் துறை வழங்கும் கூட்டுப் பயண ஆவணத்தைக் கொண்டு 5-20 மலேசியர்கள் குழுவாக சிங்கப்பூருக்குள் நுழைய இப்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூருடன் அத்தகைய ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கும் ஒரே நாடு மலேசியா மட்டுமே.

இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மலேசிய கூட்டுப் பயண ஆவணம் அடுத்த ஆண்டு முதல் ஏற்கப்படாது என்றும் தனித்தனி கடப்பிதழ் வைத்திருப்பது சோதனைச் சாவடிகளில் விரைவாக நுழைவு அனுமதி வழங்க உதவும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

#மலேசியா#MCTD#Singapore#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்