ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்குப் பின் வெள்ளம்

1 mins read
69782028-8025-44a5-a386-680b24432049
-

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் அவசர சேவைத்துறை இப்போது வெள்ளத்தின் மீது கவனம் செலுத்துகிறது.

இந்த மழை பலருக்கு நற்செய்தி என்றாலும் வெள்ளத்தால் வீடுகளும் வர்த்தகங்களும் பாதிப்படையலாம் என்று அந்நாட்டின் காவல்துறை தெரிவித்தது.

மாதக்கணக்காக நீடித்த ஆஸ்திரேலிய புதர்த்தீயில் குறைந்தது 31 பேர் மடிந்தனர். அத்துடன் 3,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.