மகாதீர்: உபரி தொகை லஞ்சமாகாது

மகாதீர்: உபரி தொகை லஞ்சமாகாது

1 mins read

புத்ராஜெயா: வர்த்தக நடவடிக்கைகளின்போது, 'விலைக்கழிவு' கேட்பது என்பது வழக்கமான ஒன்று, ஆனால் உபரியாக கிடைக்கும் அந்த பணத்தைச் சொந்த செலவிற்கு எடுக்காதவரை அது லஞ்சம் ஆகாது என்கிறார் மலேசிய பிரதமரும் கல்வி அமைச்சருமான மகாதீர் முகமது.

புத்ராஜெயாவில் கல்வி அமைச்சு பணியாளர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது ஏர்பஸ் நிறுவனம், ஏர்ஏஷியாவிற்கு லஞ்சம் கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மகாதீர், பெரு மதிப்பிலான பொருட்களை வாங்கும்போது அரசாங்கமும் 'விலைக்கழிவு' கேட்கும் என்று அவர் சொன்னார்.

"அதாவது நாங்கள் விமானங்கள் வாங்கும் போது விலையைக் குறைத்து தரும்படி கேட்போம்.

"அவ்வாறான விலைக்குறைப்பை நீங்கள் லஞ்சமாக கருதுவீர்கள் என்றால், அது உங்களைப் பொறுத்தது," என்றார்.

"ஆனால் விலைக்குறைப்பால் திரும்பக் கிடைக்கும் பணம் சொந்த செலவிற்கு எடுக்கப்பட்டால், அப்போது அது லஞ்சம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்க்கட்சிகள் தம்முடன் ஒத்துழைப்பதற்கு தயாராகி இருப்பதாக அடிபடும் பேச்சு பற்றி தனக்கு தெரியும் என்றும் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஏதாவது செய்தால் அவர்கள் அதனை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மாறாக எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அம்னோ, பாஸ் கட்சிகள் எதிர்க்கக்கூடாது எனவும் மகாதீர் வலியுறுத்தினார்.