கொரோனா கிருமித் தொற்று உலக நாடுகள் பலவற்றில் தலைவிரித்தாட, இனவாதம் தொடர்பான புகார்கள் ஆஸ்திரேலியாவில் எழுந்துள்ளன. அங்குள்ள சீன உணவகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு மக்கள் செல்வதைக் குறைத்துக்கொண்டுள்ள நிலையில் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அங்கு வாழும் சீன சமூகத்தினருக்கு எதிராகப் பல்வேறு இனவாதச் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் கூறுகின்றன. கைக் குலுக்குவதைத் தவிர்ப்பது, கிருமி பரவாமல் இருக்க வீட்டில் இருக்குமாறு சொல்வது எனப் பல சீனர்களை நோக்கி இனவாதச் செயல்களில் பலர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 15 கிருமித் தொற்று சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள சீன சமூகத் தினருக்கும் எதிராக நிலவும் இனவாத உணர்வு தேவையற்றது என்று கூறிய அமைச்சர் திரு ஆண்ட்ரு கைல்ஸ், அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இனவாதம் புகார் செய்துள்ள ஆஸ்திரேலிய சீன சமூகத்தினர்
1 mins read

