கனமழையால் ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்ச்சி

கனமழையால் ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்ச்சி

1 mins read
a0bc1023-4b7d-49ae-b834-cf6850188937
சிட்னி: காட்டுத்தீயால் சூறையாடப்பட்ட  ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று கனமழை பெய்து குளிர்வித்தது.பேடம்: இபிஏ -

சிட்னி: காட்டுத்தீயால் சூறையாடப்பட்ட ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று கனமழை பெய்து குளிர்வித்தது.

இதன் காரணமாக சில இடங்களில் எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயும் அணைந்தது. மேலும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளும் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.

கிட்டதட்ட கடந்தாண்டுகளில் இல்லாத கனமழை காரணமாக வறட்சி நீங்கும் என்றாலும், ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

என்றாலும் பல மாதங்களாகப் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீக்குப் பிறகு மக்கள் மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய கிராமப்புற தீயணைப்பு சேவைகளின் ஆணையர் ஷேன் ஃபிட்ஸ்சிமன்ஸ், "மழை வணிகத்திற்கும் பண்ணைகளுக்கும் நல்லது. அதே போல் பல மாதங்களாக தீயை அணைப்பதற்கு நாங்கள் எடுத்துவரும் முயற்சி களுக்கு மிகவும் நல்லது."

"மழையால் ஒரே நாளில் 20 இடங்களில் தீ அணைந்துவிட்டது. இப்போது ஆபத்தில்லாத வகையில் 40 இடங்களில் எரிகிறது," என்றார்.

இன்று காலை முதல் 24 மணி நேரத்திற்கு சிட்னியில் 130 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2002ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகப்படியான ஒருநாள் மழை என்று கூறப்படுகிறது.