போதைப்பொருள்: தாயும் மகனும் கைது

போதைப்பொருள்: தாயும் மகனும் கைது

1 mins read

ஜோகூர் பாரு: மூவாரின் வீடு ஒன்றில் போலிசார் நடத்திய சோதனையில் சுமார் 1.09 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 21.8 கிலோ போதைப்பொருளை போலிசார் கைப்பற்றினர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த 46 வயது தாயும் 26 வயது மகனும் கைது செய்யப்பட்டனர்.

தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கூறினர்.