சவூதி அரேபியா வழங்கிய நன்கொடை: மலேசிய நீதிமன்றத்தில் விளக்கம்

சவூதி அரேபியா வழங்கிய நன்கொடை: மலேசிய நீதிமன்றத்தில் விளக்கம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு சவூதி அரேபியா வழங்கிய நன்கொடை குறித்து மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தம்மிடம் தெரியப்படுத்தியதாக சவூதி அரேபியாவுக்கான மலேசியாவின் முன்னாள் தூதர் சையது உமர் அல் சகஃப் உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பெறப்பட்ட அந்த நன்கொடை, தேர்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று திரு நஜிப் தம்மிடம் கூறியதை அவர் சுட்டினார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) கையாடப்பட்ட வழக்கில் திரு நஜிப் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

தற்காப்பு தரப்பில் நான்காவது நபராக சாட்சியம் அளித்த பேராசரியர் சையது உமர், 2008க்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சவூதி அரேபியாவுக்கான மலேசியத் தூதராக செயல்பட்டார்.