கொரோனா கிருமி தலைவிரித்தாடும் சீனாவில் அந்தக் கிருமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று ஆயிரத்தையும் தாண்டியது.
இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஹுபெய் மாநிலத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் நூறு பேர் உயிரிழந்தனர்.
ஹுபெய்யில் உள்ள வூஹான் நகர கடலுணவு நிலையத்தில்தான் அந்த விசித்திர கிருமி தோன்றியதாக நம்பப்படுகிறது.
சீனா முழுவதும் கொரோனா கிருமி தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையும் 42,600ஐ கடந்துள்ளது.
ஹுபெய் மாநிலத்தில் மட்டும் மேலும் 2,097 பேருக்கு கிருமி தொற்றிய புதிய சம்பவங்கள் பதி வாகியுள்ளதாக ஹுபெய் சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது.
சென்ற திங்கட்கிழமை வரை ஹுபெய்யில் மொத்தம் 31,728 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டனர் என்றும் 974 பேர் அந்த கிருமிக்கு பலியாகிவிட்டனர் என்றும் ஆணையம் கூறியது.
இதனை அடிப்படையாகக் கொண்டால் கிருமிக்கு பலியாவோரின் விகிதம் 3.07 விழுக்காடு.
ஹுபெய்யில் மேலும் 16,687 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அவர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சீன அதிபர் ஸி ஜின்பிங் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் காணப் படாததால் அவருக்கும் கிருமி தொற்றியிருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபட்டது.
ஆனால் அதனை பொய் யாக்கும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவ மனைக்கு அவர் நேற்று முன்தினம் வருகையளித்தார்.
அப்போது திரு ஸியும் முகக் கவசத்தை அணிந்திருந்தார். அவரது உடல் வெப்பத்தை பரி சோதித்த பிறகு மருத்துவ ஊழியர்கள் அவரை மருத்துவ மனைக்குள் அழைத்துச் சென்ற னர்.
அங்கு, கிருமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அவரிடம் விவரிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களையும் மருத்து வர்களையும் அவர் காணொளி வழியாக பேசி நம்பிக்கையூட்டினார்.
பின்னர் பேசிய திரு ஸி, கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்த இன்னமும் வலுவான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார்.
பொதுமக்களிடம் "நம்மால் கொரோனா கிருமியை வெற்றி கொள்ள முடியும்," என்று திரு ஸி கூற, அதை மற்றவர்களும் மீண்டும் கூறி அதிபரின் நட வடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்து வதில் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளின் தலை உருளத் தொடங்கியுள்ளது.
ஹுபெய் சுகாதார ஆணையத் தின் கட்சி செயலாளரும் அந்த ஆணையத்தின் தலைவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள னர்.
இவர்களைத் தவிர மேலும் சில அதிகாரிகள் பதவியிழந்து உள்ளனர். நன்கொடைகளைக் கையாண் டதில் கடமை தவறி செயல்பட்டதாக உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை இயக்குநரும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
ஹுபெய் மாநிலத்தின் இரு கட்சித் தலைவர்களும் மாற்றப் பட்டுள்ளனர்.

