ஹாங்காங்: ஹாங்காங்கில் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நால்வருக்கு கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தக் கட்டடத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள இருவர் வசித்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தின் கழிவுநீர் குழாய்களை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்வழி கொரோனா கிருமி பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
முடிந்த வரை வெளியே செல்லாமல் இருப்பது நன்று என்று ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் ஹாங்காங் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

